Donors » A4A » THILLAI, MY LIFE WITH AUROVILLE – FROM INCEPTION TO INFORMATION

THILLAI, MY LIFE WITH AUROVILLE – FROM INCEPTION TO INFORMATION

AV Pioneer Thillai Ganapathi
My Life with Auroville – from Inception to Information

Thillai – My Life with Auroville – from Inception to Information.pdf

ஆரோவில் முன்னோடி தில்லை கணபதி ஆரோவில்லுடன் என் வாழ்க்கை – தொடக்கம் முதல் தகவல் வரைpdf

 

The Tamil version of the article directly follows below the English version 

I was born in September 1959 in Appirampattu, which is five kilometers north of Auroville and part of the bioregion community. We had a tiny family. My lone older sister got married and moved to a distant village to live with her family. My father, who was a farmer, lived to be 96 years-old, and my mother, who lived to be 85, both farmed organically back then. We used to consume organic food that was mostly grown in our own field, just like other families in the village. At the time, my family owned a small herd of cows that provided for our dairy needs. With my father, I used to visit the fields occasionally so that I could see the subtleties of agriculture.

The people’s livelihood was entirely dependent on agriculture. Summertime was always a time of joy in the village because there weren’t many crops to tend or harvest in the summer. The community has always hosted a two-week-long celebration honoring Sri Mariamman and Sri Throupathi Amman temples each year and everyone delighted in the temple festival. I used to go swimming in open wells, lakes, and large ponds with my friends during the summer (and during the monsoon season as well).

In terms of communication, there were no newspapers, radios, or telphones; and in terms of transportation there were no cars, trucks or motorbikes, and only a small number of families owned bicycles. The community had an earth track that was slick and muddy during the rainy season and lacked a proper road. The majority of individuals used to walk barefoot even for faraway places. Some people used bullock carts for long distance trips, agricultural product sales, and shopping. I was fortunate that my father could buy a bicycle for me for Rs. 250 so I could go to high school when I was a teenager. But many kids, in addition to the academic and transportation challenges, had to leave school early because their families couldn’t afford to support them.

So my early years were spent in a village facing really difficult circumstances – the typical situation for the bioregion’s villages at that time.

 

28 February 1968 was my first visit to Auroville

Not just for Auroville but also for myself, it was a memorable day. That day, four of us, who were all about nine years-old, heard that an intriguing event hosted by Ashramites was taking place close to Kottakarai village. We convinced ourselves that it would be enjoyable, so we made the decision to go there. The geographical center of Auroville, the current Banyan tree, is located five kilometers from my village. We arrived at the event place barefoot. Back then, a pathway for bullock carts connected Pondicherry and my village, passing through Matrimandir, Forecomers, and Karuvadikuppam. (In a later era, Auroville’s existence led to its closure).

We could see a massive balloon soaring high in the sky from a distance. Seeing such a large balloon for the first time was incredible. When we finally arrived at the Banyan tree, a variety of events were taking place there, including exhibitions and an inauguration ceremony. Since I was only nine years old at the time, I don’t recall much of it. For the first time, I saw foreigners from western countries around, and I noted that the majority of the people were clothed in white. I was informed that these people were Ashramites. As I was a small boy, no one had told me about the event, so I had no idea what it was about or why it was happening here. But I saw the red soil and the large empty space surrounding the location. We enjoyed the event so much that we went home and told other kids about it.

 

Learning for the first time about the Mother

 

Even though thousands of individuals lived in the bioregion surrounding Auroville at the time of the inaugural event, not everyone had the opportunity to be physically present. I consider it a blessing that I was present during the site’s opening ceremony, which served as the Mother and Auroville’s first call to me. Despite the fact that I was unaware of the founding of Auroville, Sri Aurobindo, The Mother, or the Ashram, this momentous occasion ignited a small flame within me, and it wasn’t until much later that I recognized the spiritual connection within.

Because I was the only son and had excelled academically, my parents disallowed me from farming. My first schooling was at a local government school and it was there that I finally learned about The Mother when I was a 14-year-old student in the 9th grade.

In 1971, I completed my high school education at Gandhi High School, Tiruchitrambalam.

When the Mother departed her body on November 17, 1973, our school observed a holiday in her honor.

After graduating from high school, I relocated to Chennai to pursue my pre-university studies in search of a high-quality education. I switched from Tamil to English for the first time when I enrolled in Pachaiyappa’s College in Chennai for my Bachelor of History program in 1977. Since every course was in English, I had to put in a lot of effort.

Both the institution and the dorm were well-equipped with libraries with readily available books, periodicals, and newspapers. I liked to read, and over time, I improved my general knowledge, topic knowledge, and linguistic abilities. I relocated to Chidambaram Annamalai University to pursue my postgraduate studies in sociology after completing my degree in Chennai. I put in a lot of work and placed third in the university ranking. While pursuing my Master’s degree, I also completed a diploma in labor law. I obtained my education degree with the intention of becoming a teacher later in 1991.

During this same period. I was chosen to present the Family Welfare Program on All India Radio in Pondicherry.

 

My Second visit to Auroville in 1982

Auroville’s Meenakshi-akka from Ilaignarkal School was first introduced to me by Avinasi Murugesan, a poet and teacher I met in 1982 while working at All India Radio Pondicherry. Few people from the bioregion pursued higher education at that time, and so with gratitude, I would like to say that Meenakshi-akka inspired me with her many talents as a writer, poetess, speaker, educator, and social worker. She introduced me to an American Aurovilian, Dee (later Bhavana), who had a strong interest in village development. She instructed me to conduct some research in the nearby villages, primarily on the socioeconomic circumstances of the villagers, and then to investigate the water levels in those
communities’s open wells.

I completed the studies and submitted them. At that time, Auroville was going through a lot of change, so I left to run a business. I tried my hand at business but failed miserably, and I had a hard time building a profession. Then Kalai and I got married in 1985, and we had two sons.

Third visit and long-term residence in Auroville

I made my third visit back to Auroville in 1989. I reconvened with Meenakshi-akka and said I would be interested in conducting a study on the relationship between Auroville’s effects and the social transformations occurring in the nearby villages. She recommended carrying out the research using funds provided by the Sri Aurobindo International Institute of Educational Research, or SAIIER. Under the guidance of a lecturer at Gandhi Gram University and one of my professors at Annamalai University, I finished the program. In 1991 I started teaching social studies at New Creation School and carried out the summer camp program at New Creation with success in 1995.

 

In June ‘95, after receiving encouragement from Andre and Stuart Leard and feeling appreciated for my work, I made the decision to move my family from Pondicherry to Auroville.

Kalai joined as a KG teacher at New Creation. We had excellent support from Andre T., Marie Babu, and Roy Wicks in all areas, including employment, housing, and joining Auroville.

Then I participated in a teacher exchange program coordinated by Heidi Watts, a professor in the Antioch School of Education’s Department of Education, USA. She thanked me for my teaching instruction and suggested that I apply to the program, which would provide me with a fantastic opportunity to build bridges between the East and the West. As part of my program, I helped the teachers and students at Westminister West School in New Hampshire, USA, where the whole school, up to the 5th grade, had done a thematic project on India. In addition, as part of the program, I attended the teacher training program with other teachers at the Antioch School of Education in Keene.

 

Back in India, I worked with the kids on several creative projects during the camps at Arulvazhi Education Center, sharing my expertise with the pupils. Despite so much work and activity, I had plenty of opportunities to meditate at Auroville because it was a common practice to begin or end meetings with meditation. I used to go to the Banyan tree for meditation and the Matrimandir for concentration. In addition, I participated in numerous group meditations held at the Bonfire on special days like New Year’s Day, Auroville’s birthday, and Sri Aurobindo’s birthday.

It was in 1991 that I went to Ashram for the first time, accompanied by a friend. I experienced an odd feeling of vitality and calm. I have since made numerous visits to Ashram, including on Darshan days and I always visit Sri Aurobindo’s room on my birthday.

I trust in the Mother and submitted to Her feet during trying times. I can’t believe how many obstacles I have surmounted with the Mother’s grace!

I learned a great deal about Sri Aurobindo and The Mother from Varadharajan-ayya and Symala-amma.

After ten years, I quit my position as a teacher and joined a number of working groups, including the Auroville Council, Entry Service, Selection Committee, the Review Committee, and Study Groups. I held positions as a co-executive at Arulvazhi Education Center, an executive at Tamil Heritage Center, and a trustee at NESS School. I gave my best for Auroville with sincerity during my tenure in these services.

Meanwhile, our sons did their studies in Auroville schools, became Electronic Engineers, got married and had children. We are now the grandparents of two boys and a girl.

 

Translation is a crucial task for Auroville

There has been a significant need for translation services in both Tamil and French. When Aurotraductions started in 2000, I began as a Tamil translator and worked with Claude Jouen and Swar in a small team. Later, Vatchala joined us and worked for some years and then Chitra joined us.

At Aurotraductions, our main and regular work involves translating and publishing weekly newsletters in Tamil and French to the concerned communities. From time to time, we do Tamil translations for the Auroville Tamil website.

We translate documents and communications for important working groups such as the Working Committee, Auroville Council, TDC, AV Foundation, etc. In addition, we do translations for information for visitors, newsletters and articles for Lands for Auroville Unified-LFAU, The Mothers Flower Garden, Thamarai, and so forth.

“Auro-lang” is the name of the two-book series that Aurotraductions has released. This book aims to realize the Mother’s ambition of teaching everyone the fundamentals of the four Auroville languages—English, French, Tamil, and basic Sanskrit. My primary contribution to those volumes was the Tamil section.

Because there wasn’t much information about the Auroville project available in Tamil. as a translator, I wanted to to compile all the material and bring out a book about what the Mother said about Auroville. One of the Auroville press executives, Serge, had a strong desire to see the book published in Tamil and stated that the Tamil people should be informed about what the Mother had to say. Christine had taken over this position and other publications after Serge left his body. As everyone is aware, the Mother gave Mahalingam-ayya (who has passed away) the blessing to translate both Her own writings and those of Sri Aurobindo. Despite the fact that I am a translator, I thought Mahalingam-ayya would be a better fit for the job because he had more expertise translating Their Works. Thus, I served as the general coordinator for the 350-page Tamil book titled “Auroville pattri annai kooriyavai,” (The Mother on Auroville).

With funding from the Foundation for Word Education via the Auroville Project Coordination Group, we printed 500 books. We gave away the books for free to Aurovilians and the Mother’s followers. Previously, Alain Grandcolas had hired Mahalingam-ayya and me to work on his Tamil brochure, entitled “Auroville vadivam perugirathu” (Auroville Takes Shape).

Then, the Auroville Foundation office asked me to put together a booklet on Auroville in both Tamil and English in 2008 to commemorate the 40th anniversary of the community. In addition, it was released in Bengali, Oriya, Gujarati, Hindi, Telugu, Malayalam, etc. As for Tamil, no single book had included all the material needed to understand Auroville, its history, its relationship to the Sri Aurobindo Ashram, Sri Aurobindo and the Mother, and the Auroville Foundation. This book addressed those needs. This forty-page book is given to visitors and guests who want to learn the essentials of Auroville.

In honor of Auroville’s 50th anniversary, I translated 50 panels that showcased the Township’s contributions to the bioregion and were on exhibit at the Sangamam Festival. In addition, I translated an Auroville information book for the media that was created and released by Auroville’s Outreach Media. For all these translations, my colleague Chitra helped to read the proofs. I translated some children’s books for Auroville, funded by SAIIER, and some bi-lingual books (Tamil and English). The majority of my work was done as a service to Auroville without receiving any contribution. In the last 25 years, I have translated almost 10 million words overall!

 

Living in Auroville is an adventure

“Living in Auroville is an adventure” The Mother once declared.

Living in harmony and togetherness with each another can be a struggle because Auroville is an international community with so many different ways of being, seeing, and living life in an atmosphere of freedom.

Here, young people get a fantastic chance to pick up a lot of knowledge, and then find their ways to channel and express their creative energy.

I feel that the younger generation needs to realize that living here is a challenge, in addition to being a privilege. What is needed is to make an effort to live in harmony with each other’s cultures while also showing love and peace.

To take full advantage of the great opportunity that exists here, it’s important for them to read and comprehend Auroville’s goals and principles, take part in talks, seminars, workshops, and videos about the Mother, Sri Aurobindo, and Auroville. They should engage their full being with physical and karma yoga practices, and they ought to incorporate both physical yoga and karma yoga into their everyday lives.

I have now spent the majority of my life with Auroville and I am both pleased and contented with the effort I’ve put forth thus far to support the township’s growth.

As we Aurovilians – of all ages – continue to build this international township, there will be more for us to offer and share.

It is because of the efforts we make that Auroville will progressively take on the shape that The Mother had envisioned.

My family – three generations in the Auroville story!

 

ஆரோவில் முன்னோடி தில்லை கணபதி
ஆரோவில்லுடன் என் வாழ்க்கை – தொடக்கம் முதல் தகவல் வரை

1959ஆம் ஆண்டு செப்டம்ரில் ஆரோவில்லுக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆப்பிரம்பட்டு என்னும் ஊரில் பிறந்தேன். எங்களுடையது ஒரு சிறிய குடும்பம். என்னுடைய ஒரே அக்கா திருமணமாகி குடும்பத்துடன் தூரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றுவிட்டார். விவசாயியாக இருந்த என் தந்தை 96 வயது வரை வாழ்ந்தார், 85 வயது வரை வாழ்ந்த என் அம்மா இருவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தனர். கிராமத்தில் உள்ள மற்ற குடும்பங்களைப் போலவே, பெரும்பாலும் எங்கள் சொந்த வயலில் விளைந்த இயற்கை உணவுகளை நாங்கள் உட்கொண்டோம். அந்த நேரத்தில், எங்கள் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எங்கள் குடும்பம் பசுக்களை வைத்திருந்தது. விவசாயத்தின் நுணுக்கங்களைப் பார்ப்பதற்காக என் அப்பாவுடன் அவ்வப்போது வயல்களுக்குச் செல்வது வழக்கம்.

அப்போது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் விவசாயத்தை நம்பியே இருந்தது. கோடைக்காலம் கிராமத்தில் எப்போதும் மகிழ்ச்சியின் நேரமாக இருந்தது, ஏனெனில் கோடையில் அதிகப் பயிர்கள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் மற்றுமுள்ள ஸ்ரீசுவாமிக் கோவில்களின் திருவிழா இரண்டு வார காலத்திற்கு வெகுவிமரிசையாக ஊர்மக்களால் நடத்தப்படும். ஒருபுறம் பக்திப்பரவத்துடனும், இன்னொரு புறம் கேளிக்கை நிகழ்ச்சிகளுடனும் இத்திருவிழா நடைபெறும். அந்த இருவாரங்களில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கோடைக்காலத்தில் (மற்றும் மழைக்காலத்திலும்) நண்பர்களுடன் திறந்தவெளிக் கிணறுகள், ஏரிகள், பெரிய குளங்களில் நீச்சலடித்து விளையாடுவேன்.

தகவல்தொடர்பு அடிப்படையில், செய்தித்தாள்கள், வானொலிகள் அல்லது தொலைபேசிகள் எதுவும் இல்லை; போக்குவரத்தைப் பொறுத்தவரை கார்கள், டிரக்குகள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் எதுவும் இல்லை, மேலும் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் மட்டுமே சைக்கிள்களை வைத்திருந்தனர். மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருந்த, சரியான சாலை வசதி இல்லாத மண் பாதை மட்டுமே அப்போது இருந்தது. பெரும்பாலான நபர்கள் தொலைதூர இடங்களுக்குக் கூட வெறுங்காலுடன் நடப்பார்கள். சிலர் நீண்டதூரப் பயணங்களுக்கும், விவசாயப் பொருட்கள் விற்பனைக்கும், பொருட்களை வாங்குவதற்கும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினர். என் தந்தை எனக்கு ரூ.250 விலையில் ஒரு சைக்கிள் வாங்கித் தந்தது என் அதிர்ஷ்டம். அதனால் நான் இளமைப் பருவத்தில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. ஆனால் பல சிறுவர் சிறுமிகள், கல்வி மற்றும் போக்குவரத்து சவால்களுடன், கூடுதலாக, அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ முடியாததால், உயர்நிலைக் கல்வியைக் கற்காமல் இடையிலே நின்றுவிட்டனர்.

எனவே, எனது இளமைப்பருவம் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு கிராமத்தில் கழிந்தன – அந்த நேரத்தில் ஆரோவில் மண்டலத்தில் அமைந்திருந்த கிராமங்களின் பொதுவான சூழ்நிலை இதுவாகும்.

28 பிப்ரவரி 1968 – ஆரோவில்லுக்கு எனது முதல் வருகை

இது ஆரோவில்லுக்கு மட்டுமல்ல, எனக்கும் மறக்க முடியாத நாள். அன்று, ஒன்பது வயதுடைய நான்கு சிறுவர்களாகிய நாங்கள், கோட்டக்கரை கிராமத்திற்கு அருகாமையில் ஆசிரமவாசிகள் நடத்தும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடப்பதாகக் கேள்விப்பட்டோம். அது சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம், எனவே அங்கே சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆரோவில்லின் புவியியல் மையத்தில் அமைந்துள்ள தற்போதைய ஆலமரம் எனது கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாங்கள் வெறுங்காலுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடந்து வந்தோம். அப்போது, பாண்டிச்சேரியையும் எனது கிராமத்தையும் இணைத்து, மாத்ரிமந்திர், போர்கம்மர்ஸ், கருவடிக்குப்பம் வழியாக மாட்டு வண்டிகளுக்கான பாதை இருந்தது. (பிற்காலத்தில், ஆரோவில்லின் வருகையால் அது மூடப்பட்டது).

ஒரு பெரிய பலூன் வானத்தில் உயர்ந்து பறப்பதை தொலைவிலிருந்து எங்களால் பார்க்க முடிந்தது. இவ்வளவு பெரிய பலூனை முதன்முறையாகப் பார்த்தது வியக்கத்தக்கதாக இருந்தது. இறுதியாக நாங்கள் ஆலமரத்திற்கு வந்தபோது, அங்கு கண்காட்சிகள், திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது எனக்கு ஒன்பது வயதே ஆனதால், எல்லா விஷயங்களும் எனக்கு நினைவில் இல்லை. முதன்முறையாக, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை நான் பார்த்தேன், பெரும்பான்மையான மக்கள் வெள்ளை ஆடை அணிந்திருப்பதைக் கண்டேன். இவர்கள் ஆசிரமவாசிகள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் சிறுவனாக இருந்ததால், அந்த நிகழ்வைப் பற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை, எனவே இது எதைப் பற்றியது அல்லது ஏன் இங்கு நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த செம்மண் பகுதியையும் பெரிய வெற்று இடத்தையும் பார்த்தேன். நாங்கள் அந்த மாபெரும் நிகழ்வை மிகவும் கண்டு இரசித்தோம், நாங்கள் வீட்டிற்குச் சென்று அதைப் பற்றி மற்ற குழந்தைகளுக்கு சொன்னோம்.

ஸ்ரீ அன்னையைப் பற்றி முதன்முறையாகத் தெரிந்துகொண்டேன்

தொடக்க நிகழ்வின்போது ஆயிரக்கணக்கான பேர் ஆரோவில்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நேரடியாக வந்து பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்திறப்பு விழாவின்போது இவ்விடத்தில் நான் இருந்ததை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன், இது ஸ்ரீ அன்னை மற்றும் ஆரோவில்லின் முதல் அழைப்பாக நான் கருதுகின்றேன். ஆரோவில் தொடக்கம், ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீ அன்னை அல்லது ஆசிரமம் பற்றி நான் அறியாமல் இருந்த போதிலும், இந்த முக்கியமான சந்தர்ப்பம் என்னுள் ஒரு சிறிய தீப்பிழம்பைப் பற்றவைத்தது, பிற்காலத்தில் எனக்கும் ஆரோவில்லிற்கும் உள்ள ஆன்மீகத் தொடர்பை நான் உணர்ந்தேன்.

நான் ஒரே மகன் என்பதாலும், கல்வியில் சிறந்து விளங்கியதாலும், என் பெற்றோர் என்னை விவசாயம் செய்ய விடவில்லை. எனது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் படித்தேன்.

1971ஆம் ஆண்டு திருச்சிற்றம்பலம் காந்தி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தேன். 1973 நவம்பர் 17 அன்று ஸ்ரீ அன்னை அவர்கள் தம் உடலை விட்டு நீங்கியபோது, அவரது நினைவாக எங்கள் பள்ளி விடுமுறையை அறிவித்தது. அப்போது நான் 9ஆம் வகுப்பில் 14 வயது மாணவனாக இருந்தபோது, ஸ்ரீ அன்னையைப் பற்றி முதன்முறையாக அறிந்துகொண்டேன்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, உயர்தரக் கல்வியைத் தேடிப் பியுசி படிப்பைத் தொடர சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். 1977-இல் இளங்கலை வரலாற்றுப் படிப்பிற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தபோது முதன்முறையாக தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாறினேன். ஒவ்வொரு பாடமும் ஆங்கிலத்தில் இருந்ததால் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.அக்கல்வி நிறுவனம் மற்றும் மாணவர் விடுதி ஆகிய இரண்டிலும் எளிதில் கிடைக்கக்கூடிய புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களுடன் கூடிய நூலகங்களுடன் நல்ல வசதியைப் பெற்றிருந்தன. அவற்றைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. காலப்போக்கில், எனது பொது அறிவு, பாடப்பொருள் அறிவு மற்றும் மொழியியல் திறன்களை மேம்படுத்தினேன். சென்னையில் பட்டப்படிப்பை முடித்த பிறகு சமூகவியலில் முதுகலைப் படிப்பைத் தொடர சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இடம் பெயர்ந்தேன். நான் கடினமாகப் படித்து பல்கலைக்கழக தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தேன். முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரும்போது, தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோவையும் முடித்தேன். பின்னர் 1991-இல் ஆசிரியராக வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விப் பட்டம் பெற்றேன்.

இதே காலகட்டத்தில், பாண்டிச்சேரியில் உள்ள அகில இந்திய வானொலியில் குடும்ப நலத் திட்டத்தை தயாரித்து வழங்க நான் தேர்வு செய்யப்பட்டேன்.

1982-இல் ஆரோவில்லுக்கு எனது இரண்டாவது வருகை

1982-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாண்டிச்சேரியில் பணிபுரியும்போது நான் சந்தித்த கவிஞரும் ஆசிரியருமான அவினாசி முருகேசன் அவர்கள் ஆரோவில்லில் இளைஞர் பள்ளியை நடத்திவந்த மீனாட்சி-அக்கா அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த காலகட்டத்தில் ஆரோவில் மண்டலப்பகுதியில் ஒரு சிலர் மட்டுமே உயர்கல்வியைத் தொடர்ந்தனர், எனவே எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், கல்வியாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மைத் திறன்கொண்ட மீனாட்சி-அக்கா அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார் என்பதை நன்றியுடன் கூற விரும்புகிறேன். கிராம வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட டீ (பின்னர் பாவனா) என்ற அமெரிக்க ஆரோவில்வாசி அவர்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆரோவில்லிற்கு அருகிலுள்ள கிராமங்களில், முதன்மையாக கிராம மக்களின் சமூக-பொருளாதார சூழ்நிலைகள் குறித்து சில ஆய்வுகளை மேற்கொள்ளவும், பின்னர் அந்த சமூகங்களின் திறந்த கிணறுகளில் உள்ள நீர் நிலைகளை ஆராயவும் அவர் எனக்கு அறிவுறுத்தினார்.

அந்த ஆய்வை முடித்து அதனை அறிக்கையைச் சமர்பித்தேன். அந்த நேரத்தில், சிரமமான ஒரு சூழ்நிலையில் ஆரோவில் நிறைய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது, அதனால் நான் சொந்தமாக ஒரு தொழிலை நடத்த கிளம்பினேன். நான் வியாபாரத்தில் நிறைய முயற்சிகள் செய்தேன், ஆனால் அதில் பெருத்த இழப்பு ஏற்பட்டது, மேலும் வாழ்வாதாரத்திற்கு ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொள்ள எனக்கு கடினமாக இருந்தது. பின்னர் எனக்கும் கலைச்செல்விக்கும் 1985-இல் திருமணம் நடந்தது, மேலும் எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூன்றாவது வருகையும் ஆரோவில்லில் நீண்டகாலமாக வசித்தலும்

1989ஆம் ஆண்டு ஆரோவில்லுக்கு மூன்றாவது முறையாக வருகை தந்தேன். மீனாட்சி-அக்கா அவர்களை நான் மீண்டும் சந்தித்து, ஆரோவில்லின் விளைவுகள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் நிகழும் சமூக மாற்றங்களுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆர்வமாக உள்ளேன் என்று அவரிடம் தெரிவித்தேன். ஸ்ரீஅரவிந்தர் பன்னாட்டுக் கல்வி நிறுவனத்தின் (சையர்) வழங்கிய நிதியைப் பயன்படுத்தி ஆராய்ச்சியை மேற்கொள்ள அவர் பரிந்துரைத்தார். காந்திகிராமம் பல்கலைக்கழக விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனது பேராசிரியர் ஆகிய இருவரின் வழிகாட்டுதலின் கீழ், நான் அத்திட்டத்தை முடித்தேன். 1991ஆம் ஆண்டில் நான் நியூகிரியேஷன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து சமூக அறிவியல் கற்பிக்கத் தொடங்கினேன், 1995ஆம் ஆண்டில் நியூகிரியேஷன் நிறுவனத்தில் கோடைகால முகாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினேன்.

1995 ஜூனில், ஆந்த்ரே, ஸ்டூவர்ட் லீர்டு ஆகியோரின் ஊக்கத்தைப் பெற்ற பிறகு, எனது பணியைப் பாராட்டிய பிறகு, எனது குடும்பத்தை பாண்டிச்சேரியிலிருந்து ஆரோவில்லுக்கு மாற்ற முடிவு செய்தேன்.

என் மனைவி கலைச்செல்வி நியூகிரியேஷன் பள்ளியில் கேஜி ஆசிரியராக சேர்ந்தார். வேலை வாய்ப்பு, வீடு, ஆரோவில்லில் சேருதல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆந்த்ரே டி., மேரி பாபு, ராய் விக்ஸ் ஆகியோர் எங்களுக்கு நல்ல ஆதரவை அளித்தனர்.

அதன்பின்னர், அமெரிக்காவின் ஆண்டியாக் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன் நிறுவனத்தின் கல்வித் துறையின் பேராசிரியரான ஹையடி வாட்ஸ் அவர்கள் ஒருங்கிணைத்த ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தில் நான் பங்கேற்றேன். எனது கற்பித்தல் முறைகளுக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே பாலங்களைக் கட்டுவதற்கான அருமையான வாய்ப்பை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரைத்தார். எனது திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் வெஸ்ட் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை முழுப் பள்ளியும் இந்தியாவைப் பற்றிய கருப்பொருள் செயல்திட்டத்தைச் செய்தது. அச்செயல்திட்டத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவினேன், கூடுதலாக, அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கீனில் உள்ள ஆண்டியாக் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷனில் மற்ற ஆசிரியர்களுடன் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டேன்.

இந்தியாவிற்கு திரும்பி வந்தபோது அருள்வழி கல்வி மையத்தில் நடைபெற்ற முகாம்களின் போது, மாணவர்களுடன் எனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டு பல ஆக்கப்பூர்வமான திட்டங்களில் குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றினேன். இவ்வளவு வேலை மற்றும் செயல்பாடு இருந்தபோதிலும், ஆரோவில்லில் தியானம் செய்ய எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன, ஏனென்றால் தியானத்துடன் கூட்டங்களைத் தொடங்குவது அல்லது முடிப்பது இங்கு ஒரு பொதுவான நடைமுறை. தியானத்திற்காக ஆலமரத்துக்கும், மனதை ஒருமுகப்படுத்த மாத்ரிமந்திருக்கும் செல்வது வழக்கம். கூடுதலாக, புத்தாண்டு தினம், ஆரோவில்லின் பிறந்த நாள், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்களில் ஃபோன்பயருடன் கூடிய பல குழு தியானங்களில் நான் பங்கேற்றேன்.

1991-இல்தான் முதன்முதலாக ஆசிரமத்திற்கு ஒரு நண்பருடன் சென்றேன். நான் பிராணச்சக்தி மற்றும் அமைதியின் வித்தியாசமான உணர்வைப் பெற்று அனுபவித்தேன். தரிசன நாட்கள் உட்பட பலமுறை ஆசிரமத்திற்குச் சென்றுள்ளேன், எனது பிறந்தநாளில் ஸ்ரீ அரவிந்தரின் அறைக்கு எப்போதும் சென்று வருவேன். நான் ஸ்ரீ அன்னையின் மீது நம்பிக்கை வைத்து, சோதனைக் காலங்களில் அவரது பாதங்களில் சரணாகதி அடைந்து விடுவேன். ஸ்ரீ அன்னையின் அருளால் நான் எத்தனை தடைகளைத் தாண்டியிருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!

வரதராஜன்-அய்யா, சியாமளா-அம்மா ஆகியோரிடம் இருந்து ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எனது ஆசிரியர் பணியில் இருந்து விலகி, ஆரோவில் அவை, நுழைவுச்சேவை, தேர்வுக்குழு, மறுஆய்வுக்குழு, ஆய்வுக் குழுக்கள் உட்பட பல பணிக்குழுக்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அருள்வழி கல்வி மையத்தில் இணை நிர்வாகியாகவும், தமிழ் மரபு மையத்தில் நிர்வாகியாகவும், நெஸ் பள்ளியில் அறங்காவலராகவும் பொறுப்பு வகித்தேன். இந்தச் சேவைகளில் நான் பணியாற்றிய காலத்தில் ஆரோவில்லுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் நேர்மையுடன் வழங்கினேன்.

இதற்கிடையில், எங்கள் மகன்கள் ஆரோவில் பள்ளிகளில் படித்து, எலக்ட்ரானிக் துறையில் இன்ஜினியர்களாகி, திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றனர். நாங்கள் இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாத்தா பாட்டி ஆவோம்.

ஆரோவில்லுக்கு மொழிபெயர்ப்பு ஒரு முக்கியமான பணியாகும்

தமிழ், பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் சேவைகளுக்கான குறிப்பிடத்தக்க தேவை ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டு ஆரோட்ரடுக்ஷன் தொடங்கியபோது, நான் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஆரம்பித்து, குளோத் ழுவான், ஸ்வார் ஆகியோருடன் ஒரு சிறிய குழுவில் பணியாற்றினேன். பின்னர் வச்சலாவும் எங்களுடன் சேர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிந்து வேறு பணிக்குச் சென்ற பிறகு, சித்ரா எங்களுடன் சேர்ந்தார்.

ஆரோட்ரடுக்ஷனில், எங்களது முக்கிய மற்றும் வழக்கமான பணியானது, தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வாராந்திர செய்திமடல்களை சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு மொழிபெயர்த்து வெளியிடுவதை உள்ளடக்கியது. ஆரோவில் தமிழ் இணையதளத்திற்கு அவ்வப்போது தமிழ் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறோம்.

ஆரோவில் நிறுவனம் மற்றும் செயற்குழு, ஆரோவில் அவை, டிடிசி போன்ற முக்கியமான பணிக்குழுக்களுக்கான ஆவணங்கள் மற்றும் தகவல்தொடர்புச் செய்திகளை நாங்கள் மொழிபெயர்க்கிறோம். கூடுதலாக, பார்வையாளர்களுக்கான தகவல், தாமரை, லேண்ட் ஃபார் ஆரோவில் யுனிஃபைட்-எல்எஃப்ஏயு-க்கான செய்திமடல்கள் மற்றும் கட்டுரைகள், ஸ்ரீ அன்னையின் மலர் தோட்டம் போன்ற பல சேவைகளுக்கான மொழிபெயர்ப்புகளையும் செய்கிறோம்.

“ஆரோ-லாங்” என்பது ஆரோட்ரடுக்ஷன் வெளியிட்ட இரண்டு புத்தகத் தொடரின் பெயர். ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ், அடிப்படை சமஸ்கிருதம் ஆகிய நான்கு ஆரோவில் மொழிகளின் அடிப்படைகளை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்ற ஸ்ரீ அன்னையின் இலட்சியத்தை இந்த புத்தகம் உணர்த்துகிறது. அந்தத் தொகுதிகளில் எனது முதன்மைப் பங்களிப்பு தமிழ்ப் பகுதி.

ஆரோவில் திட்டம் பற்றி தமிழில் அதிகத் தகவல்கள் இல்லை என்பதால், ஒரு மொழிபெயர்ப்பாளராக, நான் அனைத்து விஷயங்களையும் தொகுத்து, ஆரோவில் பற்றி ஸ்ரீஅன்னை கூறியவை பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட விரும்பினேன். ஆரோவில் பிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான செர்ஜ், தமிழில் இப்புத்தகம் வெளியிடப்படுவதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், மேலும் ஸ்ரீ அன்னை என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். செர்ஜ் தமது உடலை விட்டு நீங்கிய பிறகு கிறிஸ்டின் இப்பணியை எடுத்துக்கொண்டு, இப்புத்தகத்தை வெளியிட்டார். அனைவரும் அறிந்தது போல, ஸ்ரீ அன்னை மகாலிங்கம்-அய்யாவுக்கு (அவர் காலமானார்) தமது சொந்த எழுத்துக்களையும் ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களையும் மொழிபெயர்க்க ஆசி வழங்கினார். நான் மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும், மகாலிங்கம் அய்யா, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந்ததால், அந்தப் பணிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நினைத்தேன். எனவே, “ஆரோவில் பற்றி அன்னை கூறியவை” (தி மதர் ஆன் ஆரோவில்) என்ற 350 பக்கங்கள் கொண்ட தமிழ்ப் புத்தகத்தின் பொது ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன்.

ஆரோவில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் தி பவுண்டேஷன் ஆஃப் வோர்ல்ட் எஜுகேஷன் நிதியுதவியுடன், நாங்கள் 500 புத்தகங்களை அச்சிட்டோம். ஆரோவில்வாசிகளுக்கும் ஸ்ரீஅன்னையின் சீடர்களுக்கும் அப்புத்தகங்களை இலவசமாக வழங்கினோம். முன்னதாக, ஆலன் கிராங்க்கோலா, “ஆரோவில் வடிவம் பெறுகிறது” என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தை மொழிபெயர்க்குமாறு மகாலிங்கம்-அய்யாவையும் என்னையும் பணியமர்த்தினார். மேலும் மாத்ரிமந்திர் பற்றிய ஒரு தகவல் தமிழ்ப்புத்தகத்தில் வரதராஜன் அய்யா, மீனாட்சி அக்கா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

பின்னர், ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகம் 2008-ஆம் ஆண்டு ஆரோவில்லின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஆரோவில் பற்றிய சிறு புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரித்து ஒருங்கிணைக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டது. கூடுதலாக, இது வங்காளம், ஒடியா, குஜராத்தி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டது. முன்னதாக, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஆரோவில், அதன் வரலாறு, ஆரோவில் பவுண்டேஷன், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துடனான அதன் தொடர்பு ஆகிய அனைத்து விஷயங்களைப் பற்றிய பல்வேறு புத்தகங்கள் இருந்தபோதிலும், இவற்றை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே புத்தகம் ஆரோவில் பவுண்டேஷனின் சொந்த பதிப்பில் இல்லை. இந்தப் புத்தகம் அந்த தேவைகளை நிவர்த்தி செய்தது. நாற்பது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் ஆரோவில்லின் அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் பார்வையாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஆரோவில்லின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஆரோவில் மண்டலப் பகுதிக்கான இந்நகரத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் 50 பேனல்களை மொழிபெயர்த்தேன், மேலும் அவை சங்கமம் விழாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. கூடுதலாக, ஆரோவில்லின் அவுட்ரீச் மீடியாவால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஊடகத்திற்கான ஆரோவில் தகவல் புத்தகத்தை மொழிபெயர்த்தேன். இந்த மொழிபெயர்ப்புகள் அனைத்திற்கும், என் சக ஊழியரான சித்ரா உதவினார். சையர் நிதியுதவியுடன் ஆரோவில்லுக்காக சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும், சில இருமொழி புத்தகங்களையும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மொழிபெயர்த்தேன். எனது பெரும்பாலான பணிகள் ஆரோவில்லுக்கான சேவையாக எந்த நன்கொடைத்தொகையும் பெறாமல் செய்யப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 10 மில்லியன் சொற்களை நான் மொழிபெயர்த்துள்ளேன்!

ஆரோவில்லில் வசிப்பது ஒரு சாகசம்

“ஆரோவில்லில் வசிப்பது என்பது ஒரு சாகசம் ஆகும்” என்று ஸ்ரீ அன்னை ஒருமுறை கூறினார்.
ஒருவரோடொருவர் இணக்கமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வது ஒரு போராட்டமாக இருக்கலாம், ஏனென்றால் ஆரோவில் ஒரு பன்னாட்டுச் சமூகம் என்பதால், சுதந்திரமான சூழலில் வாழ்வதற்கும், பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன.

இங்கே, இளைஞர்கள் நிறைய அறிவைப் பெறுவதற்கான அருமையான வாய்ப்பைப் பெறுகிறார்கள், பின்னர் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவர்கள் பல வழிகளைக் கண்டறிகிறார்கள்.

இங்கு வாழ்வது ஒரு பாக்கியம் என்பதைத் தவிர, ஒரு சவால் என்பதையும் இளைய தலைமுறையினர் உணர வேண்டும் என்று நினைக்கிறேன். அன்பு மற்றும் அமைதியை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஒருவருக்கொருவர் மற்ற கலாச்சாரங்களுடன் இணக்கமாக வாழ முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

இங்கு இருக்கும் சிறந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, அவர்கள் ஆரோவில்லின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளைப் படித்து புரிந்துகொள்வதும், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, மற்றும் ஆரோவில் ஆகியோரைப் பற்றிய பேச்சுக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் வீடியோக்களில் பங்கேற்பதும் முக்கியம். அவர்கள் யோகக்கலை மற்றும் கர்மயோகப் பயிற்சிகளுடன் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், மேலும் அவர்கள் யோகக்கலை, கர்மயோகம் இரண்டையும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைக்க வேண்டும்.

நான் இப்போது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆரோவில்லுடன் கழித்துள்ளேன், இந்நகரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இதுவரை நான் மேற்கொண்ட முயற்சியில் நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன்.

ஆரோவில்வாசிகளாகிய நாம் – எல்லா வயதினரும் – இந்த சர்வதேச நகரத்தை உருவாக்குவதற்கு தொடர்ந்து நமது பங்களிப்பை வழங்குவதற்கும் பகிர்வதற்கும் இன்னும் நிறைய இருக்கின்றது.

நாம் எடுக்கும் முயற்சிகளால்தான், ஸ்ரீ அன்னை அகக்காட்சியில் கண்ட வடிவத்தை ஆரோவில் படிப்படியாகப் பெறும்.

என் குடும்பம் – இந்த ஆரோவில் கதையில் மூன்று தலைமுறைகள்!

 

 

 

 

 

 

 

ART FOR LAND EXHIBITION – FEBRUARY – APRIL 2024
NEW LAND FOR AUROVILLE ACQUIRED IN NOVEMBER AND DECEMBER’23
Stay In Touch